
நடக்கிற எதுவும் எனக்கு புடிக்கலை
என்ன நடக்கிது எதுவும் புரியலை
கிணத்து தவளையா நான் இருந்திருக்கேன்
கத்தி கத்தி தொண்ட வறண்டிருக்கேன்....
சீவி சிங்காரிச்சு நின்னதெல்லாம்
இப்ப சினிமா கதை போல ஆகிடுச்சி
தேர இழுத்து வந்து நடுத்தெருவிலதான்
நிறுத்தி போனதென்ன மகராசி.......
தேடித் தேடி வந்து தினம் பேசி
தேவை தீந்ததுமே வால் வீசி
மனச சாச்சி அவ போனதென்ன
மங்கயவள் இப்ப சாதிச்சதென்ன?.......
மாடு மேயுற வெள்ளாமை
அதை ஆடு மேயுதுனு அழுவறதா
மேயவிட்டு அவ வேடிக்கை பார்க்க
சாயம் வெளுத்து சங்கடமென்ன?......
காத்து வீசுறது தப்புனு சொன்னா
மூச்சி விடுறது தடைபட்டு போகும்
சாஞ்சே நடந்தாலும் சன்னிதி நீதான்
மனம் ஓஞ்சி சரிஞ்சாலும் உன்மடியில்தான்
0 comments
Post a Comment