Pages

Monday, June 23, 2014

புதுமனை புகுவிழா

ஒரு செங்கல் மீது மறு செங்கல் ஏறும் 
இரும்பு கம்பிகள் இடையில் சேரும் 
சிமெண்டு ஜல்லி கலவையை கொண்டு 
நிலத்தின் மீது புது கட்டிடம் எழும்பும் 

வாசல் நிலையில் மாலைகள் மலரும் 
ஜன்னல் கம்பிகள் அழகு சித்திரமாகும் 
வண்ணபூச்சில் கனவு கோலங்கள் போட்டு 
மின்சார உபகர்ணங்கள் வந்து உயிரூட்டும் 

வளைந்து நெளிந்து உயரும் மாடிப்படிகள் 
மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டிகள் 
வாகன நிறுத்தம் வாசலில் கோலங்கள் 
முன்வாசல் புறவாசல் மதில் சுவர்கள் 

தென்னை மரம் பக்கம் செம்பருத்தி செடிகள் 
பன்னீர் மல்லி அருகில் வண்ண ரோஜா செடி 
எல்லாம் இருந்தாலும் வெறும் கட்டிடம் தான் 
விந்தையான யதார்த்த உண்மை கேளுங்கள் 

ஜீவனுள்ள மனங்கள் சேர்ந்து இணைந்து 
வாழ்ந்தால் மட்டுமே இல்லம் என்று ஆகும் 
ஜீவனுள்ள மனங்கள் சேர்ந்து இணைந்து 
வாழ்ந்தால் மட்டுமே இல்லம் என்று ஆகும்புதுமனை  புகுவிழா

0 comments

Post a Comment