
நெருப்பாய் தகிக்கிறது……
உறவுகளில் நாட்டமில்லை
உன் அருகாமை போதும்……



உன் நிழல் மறைவில்
இளைப்பாறிடும் இன்பம் கொடு
உன் இதழ்மொழி பலம் தந்து
என்னை உயிர்பித்துக் கொடு……



வருடிச் செல்லும் காற்றில்
உன் வாசனை தூவிவிடு….
உன் வருகை நாளை
முன்னமே கொஞ்சம் மாற்றிவிடு…….



உந்தன் உயிர்கூட்டில் என்னை
ஒரு உயிராய் இணைத்துவிடு
எங்கோ மூலையில் உன்னால்
நானும் உயிர்வாழ அனுமதிகொடு…..



மெளனம் என்னை தின்றது போதும்
அனல் மொழி தந்து கொள்ளாதே….
அன்பாய் அருகில் அமர்ந்து நீயும்
வருடிடும் வரம் கேட்கிறேன்…..



உன்னில் என்னை தொலைத்தேன்
அதனால் தேடி திருப்பித்தராதே….
உன்னில் பொய்மை இல்லையென்பேன்
உதடுகள் கொண்டே மூடி மறைக்காதே…..



யாரோ ஒருவர் வீசிச் செல்லும்
அம்பால் என்னை துளைக்காதே……
உன் இதழ்கள் சிரித்தால் நான்
இதயம் சிரிப்பேன் என்றும் மறக்காதே…..



நாட்கள் இன்னும் நீளும் என்பேன்
நமக்கும் மரணம் நேரும் என்பேன்
அதுவரை அன்பால் இணைந்திருப்போம்
நம்போல் யாருமில்லையென நிரூபிப்போம்….



0 comments
Post a Comment