
உன்னை நினைத்து நினைத்து அந்த ரோஜா பூக்களும் காய்ந்து வாடின ..
காய்ந்த பூக்கள் மீது என் ரத்தத்தை ஊற்றி செம்மலராய் ஆக்கி காதல் சொல்ல வந்தேன்...
மழை வெள்ளத்தால் கடலலை சிதைத்த கோபுரமாய் விண்மீன் விழுந்த மலையாய் என் மனம் சிதைந்தது நீ ஏற்கனவே ஒருவனை கனவுக்குள் கொண்டுள்ளாய் என அறிந்த பின்...
ஆலமரமாய் கம்பீரமாக சுற்றி திறிந்த நான் ஆலம் விழுதாய் மெழிந்தேன்...
பகட்டு பகலவனாய் சுற்றிய நான் பழுதடைந்த இயந்திரமானேன்.. தொண்டைக்குள் மாட்டிய மீன் முள்ளாக என் மனதில் சிக்கிக் கொண்ட உனது உதிரத்தின் ஓவியம் உதிர மறுக்கிறது..
உதிர்ந்த ரோஜா செடிகளின் முட்கள் எல்லாம் ஒன்றாய் கோர்த்து வேலி இட்டேன்...
உன் நினைவுகள் மனதில் பூராமல் இருக்க அல்ல..
வேறு எவளது நினைவும் என் மனதில் புகுந்து விடக்கூடாது என்பதற்காக..
அவனைக் காணும் ஒவ்வொரு நொடியும் உனது வார்த்தைகள் எல்லாம் காற்றாய் மாறி வேலியினை தகர்க்க எண்ணி என் மனதைக் குத்திக் கிழிக்கின்றன....
விண்ணிலே வீடுக் கட்டி வெண்ணிலவில் விழாக் கொண்டாடி உன்னைக் காதலி ஆக்க நினைத்த நான் வெற்றுத் தாளாக காற்றில் சுற்றுகிறேன்..
என் இதயத் தாளில் நான் எழுதியக் காதல் கவிதையை முற்று செய்ய நீ இருக்கிறாய் என நினைத்தேன்...
ஆனால் இப்பொழுது நீ அவனுடன் இருக்கும் ஒவ்வொரு தருணமும் ரப்பராய் மாறி நான் எழுதிய சிறு வரி கவிதையையும் அழிக்கிறது...
கொக்கின் மூக்கில் சிக்கிய மீனாக என் மனம் உனக்காக தினந்தினம் துடிக்கின்றது..
என்னைக் காப்பாற்ற வரப் போகும் திமிங்கலம் நீ என நினைத்து...
நினைவுகளுடன்...
பல கனவுகளுடன்....
0 comments
Post a Comment