
பாசம் ஊடலிலே
வேஷம்
எப்போதுமே.........!
உலகை மறந்த
பேரின்பம்
இரு பறவைகளின்
சங்கமம்.........!
இதயங்களின்
திருட்டு இருவர்
மட்டும்
பொறுப்பு........!
உணர்வுகள்
மறுப்பதில்லை
உறவுகள்
மறப்பதில்லை..........!
நேசத்தை
சிநேகமாக
சமிக்கை செய்யும்
அசைவுகள்........!
பசியை துறந்து
நினைவை மறந்து
வாழும்
இதயங்கள்........!
பாசத்தை
பரிவுடன் பருகிடும்
பரிகாரங்கள்.........!
இரு கண்களின்
ஈர்ப்பு விசை
கந்தர்வக்காதல்........!
0 comments
Post a Comment