கைகளை பிடிக்க
ஆசை கொண்டேன்
பட்டினி கிடந்தேன்
பயத்தினில் பிடித்தேன்...
நீ பிடித்தது
எனக்கு பிடித்தது
மோட்சம் கொண்டேன்....
இடையினில் மோதிரம்
பாவமென்ன செய்தது?
பாகுபாடு அதற்கெதற்கு
பணியினை தொடர்வோம்...
ஆயினும் அரைகுறையாய்
பிடியினை விட்டாய்
பிரிவினை நமக்கிடையினில்
ஏன்தான் விதைத்தாய்...?
விளைந்தது இருவரின்
இமைகளின்
கண்ணீர் மட்டும்...
விளைத்தவள் நீயே
விலை எதுவென
நீயே சொல்லிடு
ஆனால் ஒன்று
கைகளில் தான்
விலைபேச வேண்டும்
துண்டு மூடாமலே!
0 comments
Post a Comment