Pages

Sunday, June 15, 2014

பேருந்தில்- நானும் அவளும்

ஒருமுறை அவள் ஒரு
பார்வை பார்த்ததும்
என் இருஇமை மூடியும்
பார்வை தெரியுதே !!!



பூக்களின் சிணுங்கலாய்

அவளும் பேசிட
சாரல் போல் நெஞ்சில்
சலனம் தூறுதே !!!

அவளை ஒப்பிட
உவமைகள் தேடி
ஒவ்வொரு முறையும்
தோற்றுப் போகிறேன் !!!

மலரும் காலையில்
நகரும் பேருந்தில்
என்னை நானே
தேடி திரிகிறேன் !!!

எதையோ நினைத்து அவள்
சிரித்திடும் வேளையில்
அந்த எண்ணம் 'நான்' என
நெஞ்சம் தவிக்கிறேன் !!!

நான் இறங்கும் இடம்
எனை கடந்து சென்றதை
அவள் இறங்கிய பின்பே
நானும் உணர்கிறேன் !!!

0 comments

Post a Comment