
அளவான
வெட்கங்களை
அவ்வப்போது
அழகாய்
தந்தாய்....நான்
அதுகண்டு
அளவில்லாமல்
அவஸ்தை
கொண்டு
அந்தரித்து
நிற்கிறேன்.......
நாணம்
கொண்டு
நீ..... தரை
பார்க்கிறாய்
நான்.....
மோகம் கொண்டு
அணைக்கப்
பார்க்கிறேன்.....
பார்க்கிறேன்
என்பதால்
பார்க்காமல்
போகிறாய்....பார்த்தால்
எங்கே
பார்க்காமல்
விட்டிடுவேனோ
என்றெண்ணி.......
0 comments
Post a Comment