உனக்காக வந்தேன் நானிங்கு..
உனக்காக வந்தேனடா...
உளமார்ந்த நேசம்கொண்டு
உயிர் மேலாய் பாசம் வைக்க
உனை சேர காத்திருந்து..
உனக்காக வந்தேனடா..
உறவென்னில் தூரம் போக
உணர்வென்னை கொன்று போக
உனை நெஞ்சில் தாங்கி நிற்க..
உனக்காக வந்தேனடா..
வலி என்னை வஞ்சம் தீர்க்க
மொழி என்னில் மவுனம் பூக்க
உன் கண்ணில் ஈரம் துடைக்க..
உனக்காக வந்தேனடா..
பழி உன்னை தீண்டி சென்றும்
விதி என்னை துரத்தி வந்தும்
உன் அன்பில் நானிருக்க..
உனக்காக வந்தேனடா..
பிரிவெந்தன் உயிரை கொய்து
இழப்பென்ற துயரை தந்தால்
உன் தனிமையில் எனைநினைக்க..
உனக்காக வந்தேனடா..
நானிங்கு உனக்காக வந்தேனடா..!!
0 comments
Post a Comment