
அவள் இல்லாமல் தவிக்கும் இந்த வேதனையே இவ்வளாவு சுகம் என்றால்,
அவளுடன் சேர்ந்து கழிக்கும் தருணம் எவ்வளவு சுகமாக இருக்கும்,
என்று எண்ணி எட்டாக்கனிக்கு பேராசை கொண்டேன்!
உணர்வுகளை மதிக்க தெரியாத இவ்வுலகில்,
ஜடங்களுக்கு மத்தியில் வாழும் எனக்கு,
அவள் மட்டும் ஏன் உணர்வுள்ள பெண்ணாகத் தெரிந்தாள்?
காதல் தோழ்வியால் என் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகள்,
நான் வாழும் நாட்களின் எண்ணிக்கையையும் தாண்டும்!
இறுதிவரை காதலை தராமல்,
வெறும் காதல் தோல்வி கவிதைகளை மட்டும்
என்னுள் ஊற வைத்து,
காதல் தோல்வி கொண்டவனாகினாள்!!
காதல் தோல்வியில் என்றென்றும்!
0 comments
Post a Comment