Pages

Friday, June 20, 2014

ஒளித்து வைத்துப் படியுங்கள் இந்தக்கவிதையை




நீயும் நானும்
முத்தமிட்டுக் கொண்டிருக்கிறோம் !
ஆனால்
முத்தம் மட்டும்
இட்டுக் கொண்டிருக்கவில்லை !

======================================

முடிவில்
குறைந்தபட்சம்
ஒரு
கெட்டவார்த்தையால்
நீயென்னைத்
திட்டினால்
அது எனக்கு
வெற்றி !

======================================

உன்
மௌனம்
பெருமூச்சாகி,
பெருமூச்சு
முனகலாகி,
முனகல்
சத்தமாகவேண்டும் !

======================================

மீசை முளைத்த
உன் உதடுகள்
பல் துலக்குகின்றன !

======================================

சுரங்கம்
அடைத்துச் செல்கிறது
ஒரு
இரயில்............
பயணிகளை
இறக்கிவிட !

======================================

சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றன
நம்
இரண்டு சாவுகளும் !

======================================

அந்தக் கடைசி
நொடிகளில்
உனக்கு
ஒருமுகம்
ஞாபகம் வரலாம் !
எனக்கு
ஒருமுகம்
ஞாபகம் வரலாம் !
அதுவொன்றும்
பிழையில்லை
ஒருவருக்கொருவர்
கேட்டுக் கொள்ளாதவரை !

0 comments

Post a Comment