Pages

Sunday, June 8, 2014

வலிகள் சொல்லும் வரிகள்

இதோ சிந்தித் திரிகிறேன்
கண்ணீர்த் துளிகளை உனக்காய்
நேரமிருப்பின் வந்து நனைந்து போ….
முட்கள் பட்டு எந்தன் இதயம்
உதிர வாடை உரக்க அடிக்கையில்
உண்மை என்றே நம்பி வந்து போ,,,,
நாட்கள் என்பது உனக்கு சுலபம்
நிமிடங்கள் கூட எனக்கு பாரம்
நித்திரை தொலைத்தேன் நிஜமாய் வா…..
வந்து போனது வானவில் வர்ணம்
நொந்து வாழ்கிறேன் ஏனிந்த தருணம்
நோம்புகள் இருக்கிறேன் உன் வரவுக்காய்……
சிலைகள் செதுக்கும் உளியும் கூட
சிற்பியின் கைகளில் சிலநாள் வாழும்
ஒரு நாளேனும் ஈசல் வாழ்க்கை கொள்வோம் வா……
கடலினை குடித்து கார்முகில் நனைத்து
வான்வெளி எங்கும் பறந்து திரிய
ஆசைகள் கொண்டேன்
இறக்கைகள் கடனாய் கொண்டுவா….
இந்த நிமிடம் வாழ்வு முடியும்
என்றால் கூட இளகும் அன்பால்
இணைந்தே போவோம் உணர்ந்தே நீ வா…..
மாலை என்பதும் காலை என்பதும்
மயங்கித் திரியும் எந்தன் மனதுக்கு
உந்தன் நினைவால் நகர்த்திடும் நேரங்கள் தான்….
அலைப்பு மணியின் ஓசைகேட்டால்
நீயோ என நினைப்பேன்
ஒருகனம் இன்பத்தில் திளைத்திருப்பேன்
அது யாரோ என்றால்
ஈரம் கசியும் விழிகள் கொண்டிடுவேன்….
வீம்பாய் உன்னிடம் பேசடமாட்டேன்
என்றே சொன்னாலும் அதன்
வீரியம் குறைய நொடிகள் தான் பிடிக்கும்
அதன் வலிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லை
வந்து நீ தெரிந்து கொள்……
உடனே வந்து நீ தெரிந்து கொள்…..

0 comments

Post a Comment