என் எண்ணத்தை கேளுங்களேன்
இராத்திரி பகலா கண் விழத்தேன்
கவனம் சிதராம கடினமா உழத்தேன்
பெரும் மதிப்பெண் வாங்கியிருகேன்
நீங்க எனக்காக பட்ட கஷ்டமெல்லாம்
உணர்ந்து தானே நானும் படிச்சேன்
உங்க பிள்ளையா பெருமை சேர்த்தேன்
நீங்க எனக்காக பட்ட கஷ்டமெல்லாம்
உணர்ந்து தானே நானும் படிச்சேன்
உங்க பிள்ளையா பெருமை சேர்த்தேன்
அம்மாவுக்கு வக்கீலுக்கு படிக்க ஆசை
வாதாடுர பொன்னுக்கு வரன் வராதுனு
தாத்தா தடுத்தாரம் மகனே உன்னை
வக்கீலாக்கிப் பார்க்கனும்னு அம்மா
வாதாடுர பொன்னுக்கு வரன் வராதுனு
தாத்தா தடுத்தாரம் மகனே உன்னை
வக்கீலாக்கிப் பார்க்கனும்னு அம்மா
நண்பர் மகன் பொறியியல் படித்து விட்டு
அமெரிக்காவுல நிறைய சம்பாத்தியமாம்
அந்தப் படிப்புதான் தன் கனவுன்னு அப்பா
பெத்தவுங்க சண்டை ஓய்ந்தபாடில்லை
அமெரிக்காவுல நிறைய சம்பாத்தியமாம்
அந்தப் படிப்புதான் தன் கனவுன்னு அப்பா
பெத்தவுங்க சண்டை ஓய்ந்தபாடில்லை
தவிக்கும் என் ஆசை கேட்பாறில்லை
உனக்கு என்ன விருப்பமுன்னு கேட்க
ஒரு நாதியில்லை அருகமர்ந்து என்
இலட்சியம் கேட்க வாஞ்சனையில்லை
உனக்கு என்ன விருப்பமுன்னு கேட்க
ஒரு நாதியில்லை அருகமர்ந்து என்
இலட்சியம் கேட்க வாஞ்சனையில்லை
நண்பன் தாயும் தகப்பனும் துனையாக
ஆசைப்பட்ட படிப்பு சேர்ந்து விட்டான்
என் இலட்சியத்தில் ஜெயி்ப்பேன்டானு
எல்லோரிடமும் சாெல்லி மகிழுறான்
ஆசைப்பட்ட படிப்பு சேர்ந்து விட்டான்
என் இலட்சியத்தில் ஜெயி்ப்பேன்டானு
எல்லோரிடமும் சாெல்லி மகிழுறான்
நான் வேற வீட்ல பிறந்திருக்கனுமோ ?
உழைத்து படித்ததும் வெறுப்பா போச்சு
ஆர்வமில்லா படிப்பால கவனம் சிதறி
படிக்கவியலாது மதிப்பை இழப்பேனோ ?
உழைத்து படித்ததும் வெறுப்பா போச்சு
ஆர்வமில்லா படிப்பால கவனம் சிதறி
படிக்கவியலாது மதிப்பை இழப்பேனோ ?
மனமொடிந்து செத்து விட துணிவேனோ ?
பிறர்முகம் விழிக்க அஞ்சி ஊரைவிட்டு
ஓடத் துணிவேனோ ? என் எதிர்காலம்
என்னை அச்சப்படுத்தி அழவைக்கிறதே
பிறர்முகம் விழிக்க அஞ்சி ஊரைவிட்டு
ஓடத் துணிவேனோ ? என் எதிர்காலம்
என்னை அச்சப்படுத்தி அழவைக்கிறதே
தாய் தந்தையரே நடந்து விட்டப் பல
அசம்பாவிதங்களுக்கும் என் போன்ற
சூழ்நிலைகளே காரணம் புரியுங்கள்
எங்களிடம் மனம் விட்டும் பேசுங்கள்
அசம்பாவிதங்களுக்கும் என் போன்ற
சூழ்நிலைகளே காரணம் புரியுங்கள்
எங்களிடம் மனம் விட்டும் பேசுங்கள்
எங்களுக்கும் ஆசைகள் கற்பனைகள்
உண்டென உணர்ந்து மதிப்பு தாருங்கள்
உங்களை நம்பியே பிறந்திருக்கிறோம்
எங்கள் நம்பிக்கைக்கு உயிர் தாருங்கள்
உண்டென உணர்ந்து மதிப்பு தாருங்கள்
உங்களை நம்பியே பிறந்திருக்கிறோம்
எங்கள் நம்பிக்கைக்கு உயிர் தாருங்கள்
0 comments
Post a Comment