
குடிச்சு குடிச்சேதான் என் குடலும் வேகுது......
கூறுகெட்டபோதும் மனம் குடியத்தான் நாடுது....
பொண்டாட்டி புள்ளைங்க மதிக்கிறதில்ல
ஆனாலும் என்னால குடிக்காம இருக்க முடியல...
பொண்டாட்டி புள்ளைங்க மதிக்கிறதில்ல
ஆனாலும் என்னால குடிக்காம இருக்க முடியல...
பூமி சுத்திரது உண்மைதானுங்க
புத்தி சொல்லுறேன் இப்ப கேளூங்க
இங்க காலவச்சா அங்க தள்ளுது
என் காலு ரெண்டுந்தான் இப்ப நடனமாடுது…..
புத்தி சொல்லுறேன் இப்ப கேளூங்க
இங்க காலவச்சா அங்க தள்ளுது
என் காலு ரெண்டுந்தான் இப்ப நடனமாடுது…..
தன்னந்தனியா நான் குடிச்சு பழகல
தங்கச்சி புருசனும் என்ன மதிக்கல
மாமன் மச்சானும் சேந்தே குடிச்சிருக்கோம்
மதி கெட்டு தினம் ரோட்டுல புரண்டிருக்கோம்....
தங்கச்சி புருசனும் என்ன மதிக்கல
மாமன் மச்சானும் சேந்தே குடிச்சிருக்கோம்
மதி கெட்டு தினம் ரோட்டுல புரண்டிருக்கோம்....
ஆச வச்ச என் அத்த மகளும்தான்
வேணானு சொன்னப்ப குடிச்சு பழகினேன்
அன்பு தெய்வமா என் அம்மாயிருந்துமே
அவ சொன்ன சொல்ல நான் சுத்தமா மதிக்கலை…….
வேணானு சொன்னப்ப குடிச்சு பழகினேன்
அன்பு தெய்வமா என் அம்மாயிருந்துமே
அவ சொன்ன சொல்ல நான் சுத்தமா மதிக்கலை…….
நாடி நரம்பேதான் தளந்து போச்சிது
இந்த பாளும் குடியால பேரும் கெட்டிச்சி
சத்தியம் நூறு செஞ்சு தான் நான் பாத்துட்டேன்
சாராயக் கடையை பாத்ததும் சத்தியம் மறந்துட்டேன்……
இந்த பாளும் குடியால பேரும் கெட்டிச்சி
சத்தியம் நூறு செஞ்சு தான் நான் பாத்துட்டேன்
சாராயக் கடையை பாத்ததும் சத்தியம் மறந்துட்டேன்……
குடிய நிறுத்தவே மருந்து கொடுக்கறான்
குடிக்காம இருக்க எவனும் கத்தா கொடுக்குறான்?
தாடி மழிக்கவே காசில்ல இப்போ
ஆனாலும் குடிக்காம இருக்க முடியலை….
குடிக்காம இருக்க எவனும் கத்தா கொடுக்குறான்?
தாடி மழிக்கவே காசில்ல இப்போ
ஆனாலும் குடிக்காம இருக்க முடியலை….
நல்ல சோறுதான் ஆக்கி போட்டாலும்
நாக்குக்கு இப்ப சுவையும் தெரியலை
நம்பி வந்தவ கலங்கி நின்னாலும்
நமக்கு குடிக்க காசுதான் முக்கியமுங்க
நாக்குக்கு இப்ப சுவையும் தெரியலை
நம்பி வந்தவ கலங்கி நின்னாலும்
நமக்கு குடிக்க காசுதான் முக்கியமுங்க
எழுந்த உடனே கடையில நிக்கிறேன்
எவன் வாங்கி தருவானு தலைய சொறியறேன்
எவன் வாங்கி தருவானு தலைய சொறியறேன்
வாடா மச்சான்னு கூட்டீட்டுப்போனான்
குடிடா மச்சான்னு வாங்கிக் கொடுத்தான்
அவன் பாசாகி இப்போ ஆபீசர் ஆகிட்டான்
நான் ரோட்டுல கிடக்கிறேன் சிரிச்சுட்டு போறான்
குடிடா மச்சான்னு வாங்கிக் கொடுத்தான்
அவன் பாசாகி இப்போ ஆபீசர் ஆகிட்டான்
நான் ரோட்டுல கிடக்கிறேன் சிரிச்சுட்டு போறான்
பழக்கிவிட்டவன் குடிகாரன்னு விலக்கிட்டான்
ஊத்திக்கொடுத்தவன் உத்தமனாகீட்டான்……
ஊத்திக்கொடுத்தவன் உத்தமனாகீட்டான்……
நம்பி வந்தவ ஓடா தேய்ஞ்சி கிடக்குறா
குத்த வச்சவ எம் பொண்ணு ........
என்ன கண்டதும் கூசி விலகறா
குத்தம் செஞ்ச என் மனசு குறுக்குறுக்கிது……
குத்த வச்சவ எம் பொண்ணு ........
என்ன கண்டதும் கூசி விலகறா
குத்தம் செஞ்ச என் மனசு குறுக்குறுக்கிது……
உடம்பு நடுங்குது சும்மாவே
இனி உணர்ந்து பயனேது அம்மாவே......
ஈரக்கொலயும் தான் எரியுது
இதயம் கூட இப்ப கருகுது...........
இனி உணர்ந்து பயனேது அம்மாவே......
ஈரக்கொலயும் தான் எரியுது
இதயம் கூட இப்ப கருகுது...........
குடிச்சு முடிச்சுட்டேன் வாழ்க்கைய
இனி சொல்லிப்பலனில்ல சேர்க்கைய ......
நான் குடிச்சு அழிஞ்சது போதுங்க
குடும்பம் மானம்தான் போகுதுங்க….
இனி சொல்லிப்பலனில்ல சேர்க்கைய ......
நான் குடிச்சு அழிஞ்சது போதுங்க
குடும்பம் மானம்தான் போகுதுங்க….
மனசு வச்சிதான் திருந்திட்டேன்
மார்க்கம் உண்டுனு நம்பிட்டேன்…
உணர்ந்து வருந்துறேன் உண்மையா
இனி உயரப் போகிறேன் செம்மையா……
மார்க்கம் உண்டுனு நம்பிட்டேன்…
உணர்ந்து வருந்துறேன் உண்மையா
இனி உயரப் போகிறேன் செம்மையா……
0 comments
Post a Comment