Pages

Saturday, June 21, 2014

செய்வன திருந்த செய், இன்றே செய், நன்றே செய்

சிந்தாமல், சிதறாமல் 
காரியத்தை முடித்திடு 

சீறாமல், சினுங்காமல் 
வேலைகளை தான் செய்திடு 

சிலை போலே நிற்காமல் 
வேகமாய் தான் நடந்திடு 

சிந்தனைகள் செய்யாமல் 
செவ்வனே தான் செய்வதையெல்லாம் 
செய்திடு 

சிறு விஷயத்திலும் கவனத்தை செலுத்திடு 
சின்னதென்று அலட்சியம் செய்தால் 
காரியங்கள் கெட்டிடும் 

செய்வன திருந்த செய் 
இன்றே செய், நன்றே செய்

0 comments

Post a Comment