
மோதிய தென்றல்,
என்னை மறக்க செய்து
அதன் பின் என்னை
தொடர வைத்தது!
தென்றல் காற்றின் வாசத்தில்
மயங்கி கிடந்த என்னை
காலம் அழைத்தது!
தென்றலை விட்டு பிரியும்
காலமும் வந்தது!
சென்று வருகிறேன்,
என்றதும்,
தென்றல் தன்
கண் அசைவினால்,
எனக்கு விடை கொடுத்த
பின்பு தான் தெரிந்தது,
தென்றல் காற்றில் பிரிந்தது
என் மூச்சுக்காற்றும் தான் என்று! !
ஆக்சிஜன் இல்லாமல்
தவிக்கும் என்னை
தன்னோடு என்றென்றும் அணைத்துக்கொள்ள
வருமா என் தென்றல்?
0 comments
Post a Comment