மறுபடி, மறுபடி முயன்றிடு
மாறுபட்ட வழிகளை தேர்ந்தெடு
ஒரு காரியம் செய்ய, நீ துவங்கி
விட்டால்
உன்னை மீறியும் கொஞ்சம் தவறுகள்
ஏற்பட்டால்
தளர்ந்திடாதே, பின் வாங்கிடாதே
தவறினை திருத்திடு, செய்யும் வழிகளை
மாற்றிடு
எத்தனை தோல்விகள் நீ சந்தித்தாலும்
தோற்றிடாதே,
தோல்விகளை வெற்றியாக மாற்றும் வரை
விட்டிடாதே
ஒரு முறை தோற்கலாம், மறு முறை
தோற்க்கலாம்
அடுத்த முறை ஜெயிக்கலாம், அது நடக்கும்
வரை, முயன்றிடலாம்
மறுபடி, மறுபடி முயன்றிடு
மாறுபட்ட வழிகளை தேர்ந்தெடு
0 comments
Post a Comment