கருவில் அன்னையிடம் கடன் கேட்டேன், எனக்கு உயிர் கொடுத்தாள்
கடந்து வந்து தந்தையிடம் கடன் கேட்டேன், எனக்கு உடை கொடுத்தார்
கற்க கசடற என்ப குருவிடம் கடன் கேட்டேன், கல்வி கொடுத்தான்
கவலையின்றி வாழ கடவுளிடம் கடன் கேட்டேன், செல்வம் கொடுத்தான்
அன்பெனும் கடன் கேட்டேன், அதை ஆருயிர் நண்பன் கொடுத்தான்
அழகான இரு மகவு கேட்டேன், அதை இனிய இல்லாள் கொடுத்தாள்
பணிபுரியுமிடம் கடன் கேட்டேன், பாங்காய் டிவி, பிரிஜ் கிட்டியது
பாரிலுள்ளோர் கடன் கொடுக்க, இவ்வினிய இல்லமும் கிடைத்தது
இப்போ -- ஊரெங்கும் கடன், உறவைச்சுற்றி கடன்
இப்பிறப்பே கடன் என்றிருக்க என் கடனை யாரடைப்பது ?
எனைப்படைத்த இறைவா ! என் கடன் அடைப்பது உன் கடன் !!
0 comments
Post a Comment