
மறக்க நினைத்து
நினைக்க மறந்து
பலவாறு முயன்ற பின்
உணர்ந்தேன் ;
என்
நினைவுகளின் உயிர் நாடியில்
நீ மறைந்திருப்பதை !
இருக்கும் இடம் அறிந்தால்
அகற்றுவது எளிது என்றெண்ணி ,
முயன்றேன் ;
என்னை துறந்தால்
நீ
அழுது கொண்டே சிரிக்கவும்
சிரித்து கொண்டே அழவும்
இருக்கும் தருணங்களை இழப்பாய்,
என உன் நினைவுகள்
என்னை சபித்தன !
இருந்தும் முயன்றேன்
தோற்றும் போனேன்
உன் நினைவுகளிடம் !
என்னை மறந்து விடு
உன்னை நான் மறப்பேன்
என்று சொன்ன நீயும்
தோற்று வருவாய்
திரும்பி !
நாம் இருவரும் தோற்று
நின்றாலும் ;
அன்று நிச்சயம் நம்
காதல் வெற்றி பெரும் !!!
0 comments
Post a Comment