என் கண்களாக
உலகை நினைக்கிறேன்..
எதிர்வீட்டுச் சிறுவன்
படிப்பது என் செலவில்..
மருகிப்போகும் பெண்ணிற்கு
வாழ்வளிக்கிறேன்..
பக்கத்துத் தோட்டத்திற்கும்
தண்ணீர் பாய்ச்சுகிறேன்..
ஆசிரமத்து முதியோர்
என் அரவணைப்பின் அடிமைகள்..
போகும் பாதையில்
முள்ளொன்றை
குனிந்தெடுத்து
தூரம் வீசுகிறேன்..
நிமிர்ந்து பார்க்கையில்
என் செயல்
பாராட்ட எவருமில்லை
என்றறிகையில் வரும்
கவலையில்,
வீட்டின் மூலையில்
ஒளிந்திருக்கும்
கொஞ்சம் அழுக்கும் வெளிப்பட்டு,
துருவங்கள் சேர்கின்றன !
0 comments
Post a Comment