Pages

Sunday, June 15, 2014

என் காதல் தோல்வி

யாரடா அவள்?
உன் காதலெனும் கருவறையை
கழிவறையாய் மாற்றியவள்!
காதலெனும் இலக்கணத்தை சிரிதேனும் அறிவாளா ?
அவள் என்ன உன் உயிரை
உரிக்க வந்த அரிவாளா?
தாயொருத்தி தந்த உன்னை நாயொருத்தி பறிப்பதுவோ?
ஒருபொழுதேனும் உன் தாய் மடிசாய்ந்து
அவளாசை அறிந்ததுன்டா?
செய்து பார் செத்துவிடும் ஆசை
அன்றோடு செத்துவிடும்!
காதல் தேவதை காலதேவனோடு
கைகொர்க்க பார்க்கிறாள்
அவ்விருவர் கூட்டனியை
வெற்றி பெற செய்திடாதே!
நான் காதலின் எதிரி அல்ல
காதலை அறியாத காதலியின் எதிரி
காதலி தான் வாழ்கை என்றால்
தாயுமென தனி மரமா?
தரணியில் உன்னை தந்தற்கு
நீ வழங்கும் ஓர் வரமா?
இது காதல் தோல்வி அல்ல
ஒரு காதலின் தோல்வி
சதை கொண்ட உடலிதனை
சிதை திண்று போய்விட்டால்
வதை கண்ட உன் தாயும் வாடி விட மாட்டாளா?
காதலியே என்னை தவறாக நினையாதே
நாளை நீயும் ஓர் தாய் என்பதை மறவாதே!


" சித்தார்த்தன் சிவா காதலில் தோல்வியுற்றவன் "

மதியாத பெண் பிண்ணே மதிகெட்டு அலையாதே!
அவள் பற்றி அறியாமல் அவள் மனதில் நுழையாதே!
தாய் தந்தை இருவர் உன் பின்னே என்பதை மறவாதே!
அவர்கள் காட்டும் அன்புக்கு ஈடு இனை வேறு இல்லை என்பதை உன் மனதில் இருந்து கலையாதே!

0 comments

Post a Comment