Pages

Sunday, June 15, 2014

பெண் என்னும்....!

கருவில் அரும்பி
உருவம் தரித்து
பருவம் அடையுமுன்
பலப்பல பக்குவங்கள்...
பதறாமல் பெறுபவள்...!
அரும்பும் மலராய்
அழகாய் மணம்வீசி
அன்பின் ஆழத்தை
அனைவரிடமும் காட்டி
வலம் வருகின்ற
வண்ணத் தேர்...!
எதையும் இயன்றவரை
எடுத்துச் செய்திடும்
உறுதியான உள்ளத்துடன்
உலகை வலம் வரும்
உன்னத படைப்பு...!
அகத்தில் அன்புடனும்
புறத்தில் பண்புடனும்
பெண்மைக்கு உண்மையுடனும்
பிரமிக்கும் திறமையுடனும்
பிரகாசிக்கும் சுடர்...!
பொறுமைக்கு இலக்கணமாய்
புனிதத்திற்கு பொருத்தமாய்
அடக்கம் அறிந்தவளாய்
அகங்காரம் தொலைத்தவளாய்
அன்பிற்கு பணிபவள்...!
ஆயிரம் அலுவல் செய்தும்
அலுக்காத அன்னையுள்ளம்...
அன்பாய் ஓர் வார்த்தைக்காய்
அடை காக்கும் பெண்ணுள்ளம்...!

0 comments

Post a Comment