Pages

Monday, June 16, 2014

புதிய அகத்தியம்

இல்லாத திட்டமிடுதல்களுடன்
சம்பவித்து விடுகின்ற பரிமாற்றங்கள்
உரைத்து உடைத்து விட
தேவைப்படாத மன எழுச்சிகள்
உறை பனியாய் முனை நீட்டி
ஆழநீரோட்டத்தோடு நகழ
நானும் தராமம்
நீயும் எடுக்காமல்
கடந்து செல்கின்ற நிமிடங்களில்
நடந்து விடுகின்ற கலப்புகள்
காற்றோடு கலந்து விடும் ஈரநீரா
நீரின் ஈரமோடு கலந்த காற்றா
இரண்டும் தொலைந்து
தென்றலாகிப் போக
இலக்கணத்துளிறுகக் கட்டிவிட
முடியாத ஒன்று
புரிய வைக்கத் தேவையில்லாத
புரிந்துணர்வுக்கு
எழுதிப் போகும்
புதிய அகத்தியத்தை

0 comments

Post a Comment