Pages

Monday, June 16, 2014

பூட்டிய வீட்டில்

பூட்டியவீட்டில்
தனியே விட்டு செல்லாதீர்கள்
உம் குலகருமாந்திரமான
என்னை
கொல்லிவாய் பேய்களென
மிரட்டுதுங்கள்
குடும்பப்படங்கள்
எண்ணெய் கொப்பறைகளாய்
கொளுத்துதென்னை
இடவலமென எரியும்
விளக்குகள்
புறம் வசை புலம்பலென
எதிரொலித்து மிரட்டுதுங்கள்
பேச்சுகள்
இரவு ஆந்தைகள்
விழிப்பிடுங்க
அலறி அலறி ஓடுகிறதென்
ஆழ்மனக்கனவுகள்
எப்படி ஒப்பினீர்கள்
உம்மை படைத்து
பரிபாலிப்பேனென நம்பியும்
என்னை பூட்டிய வீட்டில் தனியே விட்டுச்செல்ல

0 comments

Post a Comment