Pages

Saturday, June 21, 2014

ஏக்கம் தந்த பெண்ணே என் தூக்கம் தொலைந்ததெங்கே

முல்லை கொடியாய் படர்ந்தவளே 
உன்பார்வையாலே விழுந்தேனடி...! 
உந்தன் நினைவுகள் உசுப்பி விட 
விண்ணை நோக்கி பரந்தோமடி !! 

மேலே செல்லச் செல்ல இமயம் கூட 
உன் இதயமாய் உருகிட நான் கண்டேன் ! 
இதமாய் வந்தவளே 
என் இதயத்தை கவர்ந்தவளே !! 

எதை நான் உனக்கு பரிசாய் தந்து 
உன் உள்ளத்தில் இடம் பிடிப்பேன்?!! 
வானவில் பிடித்து உன் இமையாய்வடித்து 
இருவிழியையும் ஜொலிக்கச் செய்வேன் ! 
சிறு நேர ஜொலிப்பில் சிந்தும் 
உன் மத்தாப்பு சிரிப்பை எண்ணி எண்ணி நான் ரசிப்பேன்!! 

பிறைச்சந்திர வளைவினைக் கொண்டு 
உன் இடைதனை நானும் அலங்கரிப்பேன் ! 
மின்னலை பிடித்து மாலையாய் தொடுத்து 
பால் கழுத்தினை அலங்கரிப்பேன் ! 
ஜொலிக்கும் அழகில் இருட்டாய் நான் வந்து 
உன்னுள் சங்கமிப்பேன்...! 

உந்தன் இதழில் கசியும் தேனதை பருகி 
ஜென்மத்தின் கருமத்தை நான் முடிப்பேன்!! 
சிவனை நோக்கி தவமாய் கிடந்து 
என்றென்றும் இளமையாய் வாழும் 
வரத்தினை பெற்று உனக்கே பரிசளிப்பேன் !! 

எத்தனை கஷ்டங்கள் காலடியில் கிடந்தும் 
உண்கண்பட்டு பனிபோல் விலகுதடி...! 
காலின் கொலுசொலிக் கேட்டே 
இதய துடிப்புகள் கூட துடிக்குமடி !! 

மெல்லிய உன்சிரிப்பில் 
என் மூச்சுகாற்றும் அடக்கமடி! 
சிரிப்புகள் மறைந்தால் 
மூச்சுக் காற்றும் அடங்குமடி!! 

வான தேவதையே எனக்கு 
வரமாய் வந்தாயோ!! 
வான்மழை பொழிந்து 
வாழ்கையை செழிப்பாக்க வந்தாயோ!! 

பிரம்மனை பிடித்து 
சிறைதனில் அடைத்து 
வலுகொண்டவரையில் தாக்கிடுவேன் ! 
இத்தனை அழகாய் பெண்மையை படைத்து 
இருகண்னெனக்கு ஏன்டா தந்தாயென்று கேட்டிடுவேன் ! 

பாற்கடல் அமுதம் நீயடி! 
பாச ஒழுகல் மழையடி 
பருவம் வண்ண பூக்களடி 
பருக வந்த வண்டு நானடி ! 

உனை கண்ட நாள்முதலாய் 
தூக்கம் தொலைந்த இடமறியாது 
இதயத்தை பிசைந்து பைத்தியமாக்குதடி! 
இத்தனை கொடுமைகள் இருந்தும் கூட 
காதலை மறுக்கத் தோணலடி..!!

0 comments

Post a Comment