Pages

Wednesday, June 11, 2014

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

சிறார் சிலரை
சிலதர் ஆக்கி
சிறியராய் போனது
சிந்து தேசம்.

அந்தளம் இன்றித்
தந்திரம் தெறிக்க
சந்தரம் வாழ்பவர்
சிந்தையை துடைப்போம்.

ஆதுலன் என்று
மேதினியில் எவரையும்
ஓதுதல் தீதென
உணர்ந்திடச் செய்வோம்.

எந்தையும் தாயும்
இவரே யென்று
சொந்தம் கொண்டாடும்
சூழலைத் தருவோம்

ஆகம் தழுவி
ஆசனம் கொடுத்து
ஆட்சி அளிப்போம்
அவலம் தவிர்ப்போம்.

இனிவரும் நாட்கள்
இனிதாய் மாறிட
இல்லாமை இல்லாமல்
இருந்திட முயல்வோம்.

0 comments

Post a Comment