கனவினை மொழி பெயர்த்து
கவிதையாய் மாற்றுபவன் நான்
உன் கண்களின் முன்பு மட்டும்
வார்த்தையை தொலைப்பவன் நான்
மௌன கவிதையெல்லாம்
அர்த்தம் கொள்ள முடியும்
விளக்கி சொல்ல கேட்டால் ...
எப்படி விளக்க முடியும் ..
கூடு பாய முடிந்தால் - நீ
என் மனமாய் மாறி பார்
ஒரு தினம் வாழ்ந்துபார்
என் பணி தொடர்வாய்
ஒரு நிழலாய் வாழ்ந்திடுவாய்
என் கனவினை மொழி பெயர்த்து
(குறிப்பு மீண்டும் முதலில் இருந்து படிக்கவும் )
0 comments
Post a Comment