
கதவடைத்தது
கைகள்,
ஜன்னல் திறந்தது
கண்கள்...
தூரத்தில்
புள்ளியாய் ஒரு பிரிவு
அவள் மீது
தீராத காமத்தை
படறச் செய்தது.....
மூச்சு முட்டிய
கால்களில்
குடை சாய்ந்த
கனவுகளின் கதவுகள்
திறந்தே கிடந்தன....
இன்னும் ஆழமாய்
தேடிய பார்வையில்
பந்தி முடிந்த பசி
பெருங்கோபமாய்
புரளச் செய்தது.....
காற்றடைத்த பைகள்
கனன்று சுழன்ற
பாறைகளாய்
தீப் பிடித்தன....
இதழ் திறந்த
புது முத்தம்
திறவாத தவிப்புகளாய்
தலையணையின்
பற்கள் கடிப்பது,
தவம் கலைத்த
பெரும்
சாபமாகிறது.......
பெருங் காட்டு
துளிக் காற்று
பெரு வழியாய்
புதைய புதைய,
இதோ ஒரு துளி
கண்ணீரோடு
மரணிக்கிறது
பின்னிரவு......
0 comments
Post a Comment