
பரம ஹம்சரின் பரம சீடர்
பாரதம் கண்ட வீர துறவி
நரேந்திரன் விவேகா நந்தராய் சிறந்தார்
நான்கு யோகம் பாங்குடன் பொழிந்தார்
வனம் குகை நாடும் முனிவர்கள் நடுவினில்
அலை கடல் நடுவினில் அமைதி கண்டவர்
ஆசை கடலை கடந்து விட்டவர்
இளைய பாரதமென இளைஞரை அழைத்தார்
எழுமின் விழிமின் என் றெழுச்சியை விதைத்தார்
சமயமா நாட்டில் சகோதரத் துவத்தை
சமய மா நாட்டில் சகோதரத் துவத்தை
சமயோசிதமாய் சாற்றிய ஞானி
0 comments
Post a Comment