அவள் எனக்கு அறிமுகம்
இந்த பத்து நாட்களாக
ஆச்சர்யம், அதற்குள்
என்னை தீவிரமாக
ஆக்கிரமித்தாள்
பார்ப்பதுமில்லை, கண்
பார்வையை என் பக்கம்
திருப்புவதுமில்லை
சின்னதொரு
புன்னகையுமில்லை
தெரிந்ததாக தலை
அசைவும் இல்லை
மரம், செடி, கொடியை
பார்க்கும் போதிலாவது
ஒரு முக மாற்றம் இருந்தது
என்னை பார்க்கையிலே
அதுவும் தொலைந்தது
ரதியுமில்லை, ரம்பையுமில்லை
ரொம்ப அழகுமில்லை
அலங்காரமும் மிகையில்லை
அரிதாரமும் பூசுவதில்லை
அலட்டாமல் நடந்தாள்
அலுங்காமல் கடந்தாள்
நாள் தோறும் இதை தானே
அவள் பேரூந்து நிலையத்தில்
செய்தாள்
அதற்காகவே அவள் என்னை
ஆக்கிரமித்தாள்
அலுங்காமலே என்னை ஆட்டி
வைத்தாள்
அது தானோ அவள் வித்தைகள்?
அலுங்காமல், நலுங்காமல்
மனதில் நுழையும் விதங்கள்
0 comments
Post a Comment