சந்தேகம் சந்தேகம்
வீணான சந்தேகம்
வசந்தம் வீசும் வாழ்கையில்
புயலாய்த் தாக்கி
நன் நெஞ்சங்களையும்
நாராக்கும் நஞ்சு
பொய்யை மெய்யாய்க்காட்டி
பொல்லா அரக்கனாய்
நம்மை மாற்றி
மாய்க்கும் உயிர்க்கொல்லி
இதை உணராமல் -அதை
அள்ளி அணைத்தால் நம்மைத்
தள்ளிடும் மீளா பாதாளம்
ஆனால் இதை உணர்ந்து
அதை வேரோடு கிள்ளி எறிய
என்றுமே வசந்தம் வீசும்
வாழ்கை கிட்டுமே
0 comments
Post a Comment