
மலர் கொத்துகளிலும் ..
மலர்வளையங்களிலும் ..
மட்டுமே ..
வாசம் செய்கிறது ..
இந்த
பட்டணத்து பூக்கள் ...
மங்கையின் கூந்தல் சேர
வழியில்லாமல் ....
ஆடவரின் ஆடையை
கொள்ளை கொண்ட
பெண்கள் ....
அவர்களுக்கே உரித்தான
மலர்களை மட்டும்
ஒதுக்குவதென்ன ...
அழகாய் பூத்த வாசம் விட்டு ....
அந்நியன் தேசத்து..
அதுவும்
செத்து போன பூக்களின்
வாசம் தேடும்
இந்த பட்டணத்து பெண்கள் ....
வாசம்வீசும் பூக்கள் இன்னும்
இலக்கியங்களிலும் ..
ஓவியங்களிலும் மட்டுமே ...
பூவும் பெண்ணும்
இரட்டை கிளவிதான் சொல்ல ..
பூவையர் இல்லாத பட்டணம் தான்
நான் என்ன சொல்ல ..
0 comments
Post a Comment