Pages

Monday, June 16, 2014

நிலவுப் பயணம்

நட்சத்திரங்களுக்கிடையேயும்
வானத்து நீலக்கருமையோடும்
வெளியெங்கும்
நிரப்பிக் கிடந்த
காற்றினோடும்
இரவுப் பறவைகளின்
பசிக் கூக்குரலோடும்
கூடி உயிர்த்துக் கிடந்த
அத்தனை
உயிர்களோடும் தான்
என் நிலவுப் பயணம்
என்றும் தன்னந்தனிமையில்
பலநேரம் சுகந்தமாக
சிலநேரம் கசப்பாக
எனக்கு ஒளி தந்து போவதாய்
சில சூரியன்கள்
என் ஒளி தின்று விடத் துடிக்கும்
பூமிகள்
யாரும் தீர்மானித்து புரிந்து
தீர்த்து விட முடியாது போகும்
என் தனிமை வாழ்வு
உன்னிடமில்லா என் வார்த்தைகளுக்கு
அகராதியில் மூழ்கி வந்தும்
முத்தை எடுத்து
தொலைத்து விட்ட மூச்சாய்
அர்த்தங்கள் அர்த்தங்களாகிப்
போகப் போவதில்லை உனக்கு
கட்டிய கண்களுக்கிடையில்
தூண்களாக
நீ தீர்மானித்திருந்த என் கால்கள்
நகர்ந்து மிதிக்காத வரை
கண்களின் கட்டவிழ்க்கப் போவதில்லை நீ

0 comments

Post a Comment