Pages

Monday, June 23, 2014

காதலன்

எனக்குள் விளைந்த காதல் 
எப்படி இன்று 
உனக்கு விழுந்தது காதில் 

மறைத்தல் என்பது காதலில் 
மனதைக் கொண்டு 
நிறைத்தல் என்பதுவே காதில் 

சொன்னாலே புரியாத சொல்கூட 
உன்னால் மட்டுமே 
தன்னாலே புரியும் சொல்லாகுது 

நுதல் முதல் குதிவரை 
காதல் குதித்தாலும் 
வாய் மறுக்கும் இல்லையென 

இல்லாமையில் இருப்புக் கொண்ட 
உள்ளமையின் உண்மையை 
கல்லாமலே சொல்பவன் காதலன் 

சத்தம் போடும் வாய் 
காதலின் போது 
நித்தம் போடும் பொய் 

நாளத்தில் குருதித் தாளத்தின் 
நாடித் துடிப்பறிந்தவன் 
நடிப்பைத் துப்பறிந்து விடுபவன் 

இதயத்தின் செயற்பாட்டை அறிய 
ஈ சீ ஜி இனியெதற்கு 
காதலனைக் கேட்டுப் பாருங்கள்

0 comments

Post a Comment