
வானத்தை எட்டிப்பிடித்து
மேகத்தில் வீடு கட்டி
வானவில்லில் சின்னதாய்
ஒரு கட்டில் செய்து
முழு மதியை உனக்கு
தலையணையாய்
கோர்த்து வைப்பேன்
காதலியே நீ கண்ணுறங்க
வானதூதர்களை
தாலாட்டுப் பாடச்சொல்லி
விண்மீன்களை காவல் வைப்பேன்
ஆதவனில் அடுப்பு செய்து
மழை நீரில் தேனீர் போடுவேன்
தினம் உன் பசி தீர்க்க
வின்வெளியில் விவசாயம் பார்ப்பேன்
நீ குளிக்க வேண்டுமென
நயாகராவை
தலை கீழாய் திருப்பி வைப்பேன்
ஆகாயத்தில் ஒரு தொங்கும்
தோட்டம் அமைத்து
உன் மூச்சிக்காற்றில்
தினம் தழைத்தோங்க
குறிஞ்சு பூக்களை நட்டு வைப்பேன்
செவ்வாயில் நிலம் வாங்கி
நம் காதல் சின்னமாய்
அங்கே நமக்கொரு
தாஜ்மஹால் கட்டி வைப்பேன்
காதலியே இது பூவுலகமல்ல
யாரும் காணாத புதுவுலகம்
உனக்காய் நான் சிருஷ்டித்த
நம் காதல் உலகம் .
1 comments
எதுக்காக திருடி போடுறிங்க பஸ்
Post a Comment