Pages

Friday, June 20, 2014

நினைவில் வைத்துக்கொள்

நினைவில் வைத்துக்கொள்


மௌனமாக இருப்பதால் மறந்துவிட்டேன் என்று நினைக்காதே

மரணத்திலும் மறக்க முடியாது உன்னையும் உன் மீது நான் கொண்ட அன்பையும்

உன்னை விட்டு விலகிச் சென்றதற்கு காரணம் உன் மீது கொண்ட கோபத்தினால் அல்ல

உன் மீது உள்ள அன்பினால்

இன்னும் சிறிது நேரம் அங்கு நின்றிருந்தால் என் கண்கள் உணர்த்தி இருக்கும் கண்ணீரால் உன் மீது நான் வைத்த அன்பினை

அதனால் தான் விலகிவிட்டேன்

இனி உன் கனவில் கூட வரமாட்டேன்

எப்போதும் என் நினைவில் நீ இருப்பாய்

பெயரளவிலாவது நினைவில் வைத்துக்கொள் இப்படி ஒருவன் உன்னை நேசித்தான் என்று 

0 comments

Post a Comment