
கையளவு
இருப்பவனை
கையில்
எடுக்க
துணிவில்லை
வரவில்லை
கை.
அருகில் சென்று
சிரிக்க
மலர்க்கப்
பார்த்தேன்
பீரிட்டு
அழுகிறான்
பின்
வாங்கினேன்
கையசைத்து
விரலசைத்து
வாயசைத்து
விளையாட்டுக்
காட்டியிருக்க
உறங்கியே
விட்டான்
உறங்கியவனை
உற்றுப்
பார்க்கிறேன்
லேசாக
நெளிந்து
மெல்ல
சிரிக்கிறான்
வாய் பிளந்து
0 comments
Post a Comment