Pages

Monday, June 16, 2014

ஆல்பம்

எனது
பிஞ்சி பிராய
புகைப்படம்
தன்
பழைய முகத்தை
தேடுகிறது
என்
வாலிப முகத்தில்.
எனக்குள் நான்
தொலைந்து இருப்பது
இதற்கு
தெரிய வருகிறது...
60 கால
எனது புகைப்படம்
இன்னும்
இருபது வருட முடிவில்
என்னை
தேடும்பொழுது
என்
வாலிப முகவரி
தொலைந்திருக்கும்.
இப்படியாக
கொஞ்சம்
கொஞ்சமாக தொலைந்து
இறுதியாய்
இறுதியில்
நானே
தொலைந்திருப்பேன்
யாரேனும்
என் புகைப்படத்தை
தேடலாம்...
நாடலாம்...
எந்தப் புகைப்படமும்
என்னை
தேடவோ
நாடவோ முடியாது.

0 comments

Post a Comment