
என்னவளே !
நாம் தனித்திருக்கும்
ஒரு பொதுவிடத்தில்
எதாவதொரு
அசந்தர்ப்பத்தில்
நான்கு பொறுக்கிகள்
நம்மைச் சுற்றிவளைத்தால்,
பெண்மைக்கான
சமூக சௌகரியங்களைக்
காரணங்காட்டி
நீ
என் முதுகின்பின்னே
ஒளிவதை
நான் விரும்பமாட்டேன் !
நாம்
இருவரும் சேர்ந்தே
அவர்களுடன்
சண்டையிடுவோம்
முடியும் வரை !
எதற்கும்
உன் கைப்பையில்
ஆயுதங்களிருக்கட்டும்
எப்போதும் !
0 comments
Post a Comment