Pages

Sunday, June 22, 2014

பாட்டெழுத நினைக்கிறேன்

சுமை இல்லை சுமை இல்லை 
காதல் அழகான சுகம் சுகம் 
மனம் இல்லை மனம் இல்லை 
உன்னை நீங்க தினம் தினம் 
இது போல இது போல உணர்வு 
எந்நாளும் வரம் வரம் 

நிலையில்லா உடலுக்கு அழிவில்லா காதல் 
பிரிவில்லா வாழ்க்கைக்கு துணையான தேடல் 

அழகான பெண்ணே 
என் அமுதான கண்ணே 
படைத்தானே உன்னை 
துலைத்தேனே என்னை 

உடல் நடமாடும் 
உயிர் உன்னை தேடும் 
கண் அலைமோதும் 
கவிதை மலை பொழியும் 

விடியாது பொழுதும் இல்லை 
மலராத மலரும் இல்லை 
அழியாத உடலும் இல்லை 
நீ இன்றி நானும் இல்லை 

கண்ணோடு விழியாக கருவான பெண்ணே 
இமையாக நான் மாறி உனை காப்பேன் கண்ணே 

சுமை இல்லை சுமை இல்லை 
காதல் அழகான சுகம் சுகம் 
மனம் இல்லை மனம் இல்லை 
உன்னை நீங்க தினம் தினம் 
இது போல இது போல உணர்வு 
எந்நாளும் வரம் வரம் .

0 comments

Post a Comment