Pages

Friday, June 13, 2014

சங்கொடுவா ராமா நுசம் 5 - நேரிசை வெண்பாக்கள்

வாசமிக ஈர்க்கின்ற வற்றல் குழம்பையே
பாசமிகு நம்புலவ! பார்புகழும் – நேசமுடன்
உங்கள் மு.இராக வையங்கா ருக்குகொஞ்
சங்கொடுவா ராமா நுசம். 13

அப்பளமும் மோரும் சுடுசோறும் எந்தனுக்கு
இப்பொழுதே கொண்டு தரவேண்டும் – தப்பாது
உங்கள் இரா.இராக வையங்கா ருக்குகொஞ்
சங்கொடுவா ராமா நுசம். 14

பொங்கலுடன் சாம்பாரும் சேர்த்துநான் ...சாப்பிட்டேன்
வெங்காயச் சட்னி கலந்துதான் – இங்கெனக்கு
தங்கக் கரத்தால் எழுமிச்சை நற்கனிர
சங்கொடுவா ராமா நுசம். 15

0 comments

Post a Comment