Pages

Sunday, June 15, 2014

அன்பு = 100

அ உயிரெழுத்தின் 
முதல் எழுத்தே - நீ 
எண்ணிக்கையில் 1 
ன் மெய்யெழுத்தின் 
இறுதி எழுத்தே - நீ 
எண்ணிக்கையில் 18 
பு என்ற உயிர்மைஎழுத்தே 
உன் எண் வரிசை 81 - கண்டீரா 
அன்பு என்ற தமிழ் சொல்லின் 
கூட்டுத்தொகை 100 என்று 
அன்பென்றால் நூறு 
நூறென்றால் முழுமை 
முழுமை என்றால் நிறைவு 
அன்பு வழிச் சென்றால் 
முழுநிறைவுன்ற மகிழ்ச்சியும் 
அதன் வழி வரும் அமைதியும் 
நூற்றுக்கு நூறு - நம் 
வாழ்வில் சாத்தியமே - இதுவே 
சான்றோரின் சரித்திரமே

0 comments

Post a Comment